தமிழர்கள்
தமிழ் பேசுபவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லை, அப்படி பார்த்தால் உலகில் ஆங்கிலேயர்கள் தான் அதிகம் என்று சொல்வார்கள் எனக்கு தெரிந்தவரையில். தமிழகத்தில் இருக்கும் தமிழர்களை உணர்வற்றவர்கள், சொரனையற்றவர்கள் என்று நம் இந்திய அரசியல்வாதிகள் நினைத்து விட்டார்களோ என்ற ஐயம், ஏனென்றால் நம் தமிழனத்துக்கு எவ்வளவு தொல்லைகொடுத்தாலும் கடைசியில் பணத்தை, பதவியை கொடுத்து நமது ஏமாந்த தமிழர்களை அடிமையாக்கிவிடலாம் என்ற எண்ணத்தில் வருகிறார்கள். நமது ஏமாந்த தமிழர்களும் அதற்கு அடிமையாகி அவர்கள் சொல்வதெற்கெல்லாம் தலையாட்டுகிறார்கள்.
இவர்களுக்கு பதவியும் பணமும் இருந்தால் போதும் நம்மினத்தை யார் அழித்தால் என்ன என்ற எண்ணத்தில் இருக்கின்றார்கள். இவர்கள் தான் ஒன்றுக்கும் உதவாத பிரச்சினைக்கெல்லாம் இவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துகொள்கிறார்கள் கூட பிறந்தவர்களை, மற்றும் உறவினர்களை காட்டி கொடுக்கிறார்கள்.
அரசியல்வாதிகளின் அடிமைபடுத்தும் எண்ணம்
இந்தியாவில் தமிழகத்தில் வாழும் தமிழர்கள் தமிழினப்பற்று என்றால் என்ன என்று கேட்கிறார்கள் காரணம் அவர்கள் மனம் மாறிவிட்டது அவர்களின் மூளை சிந்திக்கும் தன்மை இழந்துவிட்டது, காரணம் இவர்கள் நாகரிக உலகில் பின்னோக்கி செல்கிறார்கள், இன்றைய இளைஞர்கள் படித்த பகட்டான வாழ்க்கையிலும் கற்கால மற்றும் ஆங்கிலேய அடிமைகளாக இருந்த காலத்திற்கு சென்று விட்டனர், இவர்களை சிந்திக்காத வகையில் மதுவை விநியோகம் செய்து மதியிழக்க செய்துவிட்டார்கள் இப்பொழுது இருக்கும் அரசியல்வியாதிகள். யாராவது எதிர்த்து கேட்டால் அவர்கள் வாயிற்கும் பூட்டு ஆம், இங்குள்ள இளைஞர்கள், உழைப்பாளிகள் அனைவரையும் அடிமைபடுத்தி அவர்களை கேள்விகேட்கா வகையில் சோம்பேறி மக்களாக மாற்றிவிட்டனர். இலவசம் என்ற ஒன்றை வழங்கி அவர்களின் இளமையை கெடுத்து, கொலை கொள்ளை வழிப்பறி கற்பழிப்பு கொடுஞ்செயல் புரிய அரசியல் வாதிகள் தூண்டி விடுகின்றனர். பள்ளி செல்லும் பத்து வயதில் மதுவிற்கு அடிமை, பின் எப்படி APJ அப்துல் கலாம் கண்ட கனவு பலிக்கபோகிறது. ஒரு மனிதன் சிந்தனை செய்கிறானோ அப்பொழுது தான் அவன் அவனுடைய ஆறாம் araivai பயன்படுத்துகிறான் அதன் மூலமே நாகரிகம் பிறக்கிறது. ஆனால் இங்கே நவீன விஞ்ஞான உலகில் கற்கால உலகிற்கே சென்றுவிட்டார்கள் நம் சுயநலம் கொண்டவர்கள்.
Comments